தமிழர் உருவாக்கிய மலாயா தமிழ் நூலகம் படிப்படியாக மூடப்படுகிறதா?

Jan 29, 2016, 07:44 PM

மலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ் நூலகம் இனி அங்கு பயிலும் மாணவர்களுக்கு மட்டும்தான் என்ற புதிய விதி அங்கே சமீபத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த புதிய விதி இந்த நூலகத்தின் பயன்பாட்டை தமிழ் மாணவர்கள் மத்தியில் வெகுவாக குறைக்கும் என்றும் படிப்படியாக இந்த நூலகம் மூடப்படும் சாத்தியத்தை உருவாக்கும் என்றும் மலாயா தமிழ் உயர்கல்வி ஆய்வு மாணவர்கள் மத்தியில் அச்சம் தோன்றியுள்ளது.

மலாயா தமிழ் மாணவர்களுக்காகவென, அந்நாட்டுத் தமிழர்களிடம் நிதி வசூலித்து உருவாக்கப்பட்ட இந்த ஆய்வு நூலகம் படிப்படியாக பொதுப்பயன்பாட்டில் இருந்து அகற்றப்படும் போக்கு கவலையளிப்பதாக கூறுகிறார் மலேஷியாவின் வல்லினம் இதழ் ஆசிரியர் நவீன் மனோகரன்.

மலாயாவிலேயே அதிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த மலாயா பல்கலைக்கழக நூலகம் உருவான வரலாறு, அதன் முக்கியத்துவம் மற்றும் அது சந்திக்கும் சவால்கள் குறித்து நவீன் மனோகரன் பிபிசி தமிழோசைக்கு அளித்த விரிவான செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.