மும்பை தாக்குதலில் பெற்றோரை இழந்த இஸ்ரேல் சிறுவன் மீண்டும் இந்தியா வருகை

  • ஜுபைர் அகமது
  • பிபிசி
மோஷே
படக்குறிப்பு, மோஷே ஹோல்ட்ஸ்பெர்க்

பதினொரு வயதான மோஷே ஹோல்ட்ஸ்பெர்க் இஸ்ரேலின் அஃபூலாவில் தனது தாத்தா, பாட்டி வீட்டில் பாதுகாப்பான சூழலில் வளர்கிறார். மோஷேவை தனிமையாக்கிய 2008 மும்பை தீவிரவாத தாக்குதலின் போது நடந்த வன்முறைக்கு முற்றிலுமாக மாறாக அவரது தாத்தா பாட்டி வீடு அமைதியாக இருக்கிறது.

2008ஆம் ஆண்டு தெற்கு மும்பையில் உள்ள யூதர்களின் சபாத் இல்லத்தைத் தீவிரவாதிகள் தாக்கியபோது, மோஷேவின் பெற்றோரான ரிவ்கா மற்றும் ரிவ்கி ஹோல்ட்ஸ்பெர்க்கும் கொல்லப்பட்டனர். மோஷே உயிர்தப்பினார்.

மோஷேவின் படுக்கைக்கு மேலே அவனது அம்மா, அப்பா படம் உள்ளது. அவர்கள் இளமையாகவும் அழகாகவும் இருக்கிறார்கள். ``தினமும் அவர்களது படங்களை பார்த்த பிறகு தான் தூங்க செல்வான்'' என்கிறார் மோஷேவின் தாத்தா ரப்பி ரோசன்பேர்க்.

மோஷே தனது பெற்றோரை இழந்து தவிக்கிறார். அவர்கள் எப்படி இறந்தனர் என்பது மோஷேவுக்கு தற்போது தெரிந்திருக்கிறது. தனது பெற்றோர் இறந்த பிறகு தன்னை பர்த்துக்கொண்ட குழந்தை பராமரிப்பாளரர் சாண்ட்ரா மற்றும் தனது தாத்தா பாட்டி மீது அன்பு வைத்துள்ளார்.

தனது பெற்றோர் இறந்தபிறகு முதல்முறையாக மும்பை செல்ல உள்ளார் மோஷே. இது ஒரு உணர்வுப்பூர்வமான பயணம் என்கிறார் அவரது தாத்தா. '' சபாத் இல்லத்தைப் பற்றியும், இந்தியா பற்றியும் மோஷே கேட்டுக்கொண்டிருக்கிறான்'' என்கிறார்.

மோஷே
படக்குறிப்பு, மோஷேவின் பெற்றோர்

மோஷே பள்ளிக்கு சென்றிருந்தபோது அவரது வீட்டுக்குச் சென்றோம். குடும்ப உளவியலாளரின் அறிவுரையால், ஊடக வெளிச்சத்தில் மோஷேவை காத்து வைத்திருப்பதாக அவரது தாத்தா கூறுகிறார்.

மோஷேவை நம்மால் நேரடியாகப் பார்க்க முடியவில்லை என்றாலும், அவரது சிறிய அறையையும், படங்களையும், புத்தகங்களையும் பார்த்தோம். மோஷே சிறந்த மாணவர் என்கிறார் அவரது தாத்தா.

''அவன் புவியியல் மற்றும் கணித பாடத்தில் ஆர்வமுள்ள மாணவர்.'' என்கிறார் அவர்..

இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் மோஷேவும் அவரது தாத்தா பாட்டியும் வந்துள்ளனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அழைப்பின் பெயரில் மோஷே இந்தியா வந்துள்ளார். கடந்த வருடம் மோதி இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றிருந்த போது மோஷேவை சந்தித்தார்.

'' நாங்கள் அவனை இஸ்ரேலுக்கு இங்கே அழைத்து வந்தபோது அம்மா, அப்பா எங்கே என கேட்டு தினமும் இரவு அழுவான்'' என்கிறார் ரோசன்பேர்க்.

''ஆரம்பத்தில் அவன் என்னிடம் இணக்கமாக இல்லை. படிப்படியாக எங்களுடன் இணக்கம் ஏற்பட்டதை உணர்ந்தேன். அவனுக்கு சைக்கிள் வாங்கிக்கொடுத்தேன். அவனுக்குப் பிடித்த இடத்திற்கு அழைத்துச் சென்றேன்.'' எனவும் கூறுகிறார் அவர்.

மோஷே
படக்குறிப்பு, மோஷேவின் தாத்தா

குழந்தை பராமரிப்பாளரர் சாண்ட்ரா, மோஷேவிற்கு நன்மை செய்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். '' நாங்கள் அந்த பெண்ணுக்கு நிறைய கடன்பட்டிருக்கிறோம். அவருக்கு இஸ்ரேலிய குடியுரிமை பெற்றுக்கொடுத்துள்ளோம்'' என்கிறார் அவர்.

மோஷேவுக்கு அருகில் இருப்பதற்காக சாண்ட்ரா இஸ்ரேலுக்கு வந்துவிட்டார். அஃபூலாவில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெருசலேமில் வேலை செய்கிறார். வார விடுமுறை நாட்களில் மோஷேவுடன் நேரத்தை செலவழிக்கிறார்.

'' சாண்ட்ரா தாமதமாக வந்தால், மோஷே கவலைவாகிவிடுவான் , ஏன் தாமதமாக வருகிறீர்கள்'' என அவனே சாண்ட்ராவுக்கு போன் செய்து கேட்பான்.'' என்கிறார் ரப்பி ரோசன்பேர்க்

மோஷே

பட மூலாதாரம், MEAINDIA @TWITTER

சபாத் இல்லத்தில் தாக்குதல் நடந்த போது, கீழ் தளத்தில் சாண்ட்ரா ஒளிந்துகொண்டிருந்தார். அங்கு மோஷே அழும் சத்தம் கேட்டுள்ளது. பிறகு அவரைக் காப்பாற்றினார்.

புதன்கிழமையன்று, மும்பை சபாத் இல்லத்திற்கு வரும் இஸ்ரேல் பிரதமரை வரவேற்க மோஷேவுடன் சாண்ட்ராவும் இந்தியா வந்துள்ளார்.

மோஷேவின் தந்தை ஒரு யூத மத குரு (ரப்பி). கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அவர் தனது மனைவியுடன் மும்பை வந்தார்.

தனது தந்தையின் அடிச்சுவட்டை மோஷே பின்பற்றுவார் என தெரிகிறது. '' மோஷேவிற்கு இப்போது சின்ன வயது. தனது 20-22 வயதில் மும்பைக்கு சென்று, சபாத் இல்லத்திற்கு மோஷே சென்று பணியாற்றுவார்'' என்கிறார் ரப்பி ரோசன்பேர்க். இந்த பணிக்காக மோஷேவை ஏற்கனவே அவரது தாத்தா தயார்படுத்தி வருகிறார். மோஷே ஒரு மதகுரு(ரப்பி) ஆகுவதற்கு தயாராகி வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :