ஏழு மாதங்கள்... இரண்டு பிரதமர்கள்... என்ன நடக்கிறது இந்த ஐரோப்பிய தேசத்தில்?

பிரதமர் டுடோஸ்

பட மூலாதாரம், EPA

ஏழு மாதங்களில் ரொமானியா நாட்டில் இரண்டு பிரதமர்கள் மாறியுள்ளனர்.

மிஹாய் டுடோஸ் ரொமானியா நாட்டின் பிரதமராக இருந்தார். ஆனால் அவரது சொந்தக் கட்சியான சோஷியல் டெமாகிரேட் கட்சியே அவருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றதை அடுத்து, அவர் தன் பதவியை இழந்துள்ளார்.

அந்தக் கட்சியில் அதிகார சண்டை நடத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம், அப்போதைய பிரதமராக இருந்த சொரின் கிரைண்டியானு பதவியை இழந்தார்.

என்ன நடக்கிறது அங்கே?

சோஷியல் டெமாகிரேட் கட்சி, அவருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுவிட்டதாக அந்த கட்சியின் தலைவர் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

உள்துறை அமைச்சராக இருந்த கார்மென் டான் தன்னிடம் பகிரங்கமாக பொய் கூறுகிறார் என்று சொல்லி அவரை பதவி விலக கூறினார் பிரதமர் மிஹாய் டுடோஸ் . ஆனால், இப்போது அவரே பதவி விலகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் கார்மென் டான், கட்சியின் தலைவரான லீவ்யூ ட்ராக்னியாவுக்கு நெருக்கமானவர். அவருடன் சச்சரவிட்ட காரணத்தால்தான், பிரதமர் தன் பதவியை இழக்க நேரிட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

நான் கட்சியை பிளவுபடுத்த விரும்பவில்லை என்கிறார் மிஹாய்.

அவர், "அவர்கள் எனக்கு பதவி அளித்தனர், இப்போது என்னை நீக்கி உள்ளனர். என்னுடைய செயல்களுக்கு நான்தான் பொறுப்பு, என்னுடைய செயல்களுக்காக நான் வருந்தவில்லை" என்று கூறி உள்ளார்.

அவர் முறையாக அதிபரிடம் தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை கொடுத்தப் பின், இப்போது துணை பிரதமராக உள்ள பால் ஸ்டனெஸ்கோ அதிபராக பொறுப்பேற்பார்.

அரசியல் உறுதியின்மை அங்கு நிலவினாலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏழ்மையான நாடான ரொமானியாவில் பொருளாதார சளர்ச்சி வலுவாகவே உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :