வாதம் விவாதம்: ''ஆண் என்ன பெண் என்ன...இருவருக்கும் ஒரே சட்டம் தேவை''

''ஆண் என்ன பெண் என்ன...இருவருக்கும் ஒரே சட்டம் தேவை''

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் பெண்கள் மதுபானம் அனுமதி அளித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ''மது அருந்துவதை ஒழுக்க நெறியாகக் கருதி பெண்களுக்கு மட்டும் தடை விதிப்பது சரியா?'' என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே.

''ஒழுக்கம் என்பது ஆண், பெண் இரு பாலருக்கும் பொதுவானது. மதுவால் ஏற்படும் மன, உடல் சார்ந்த விளைவுகள் இருவருக்கும் ஒன்றே. மொத்தத்தில் மது விலக்கே சிறப்பானது. ஆண் மட்டும் குடிக்கலாம் என்பது ஆண் திமிரையே காண்பிக்கிறது'' என கருத்து தெரிவித்துள்ளார் சரோஜா.

''மது அருந்துதல் ஒழுக்க சீர்கேடு என்றால், மதுவை தடை செய்வது சரியான தீர்வாக இருக்கும். அதை விடுத்து பெண்களுக்கு மட்டும் மது அருந்தத் தடை என்பது ஆணாதிக்கத்தைக் குறிக்கிறது. ஆண்கள் மது அருந்துவதால் அவர்களுக்கு எந்த ஒரு உடல் கேடும் நிகழாதா?ஆண்கள் மது அருந்தி வாகனம் ஓட்டினால் எந்த விபத்தும் நடக்காதா..? இல்லை இது கலாச்சார பாதுகாப்பு என்றால், மது வை முற்றிலுமாக தடை செய்வதுதான் சரி''. என பதிவிட்டுள்ளார் பாலாஜி.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

Twitter பதிவின் முடிவு, 1

''பெண்கள் மது அருந்துவதைத் தடை செய்ய முடியாது அது தனிமனித உரிமை சார்ந்தது ஆனால் கடைகளில் பெண்களுக்கு மது விற்பதைத் தடை செய்யலாம் பொது இடங்களில் பெண்கள் மது அருந்துவதைத் தடை செய்யலாம்'' என்பது கோபால் எனும் நேயரின் கருத்து.

''அதில் ஆண் என்ன பெண் என்ன...இருவருக்கும் ஒரே சட்டம் தான்...பாரபட்சம் இல்லாமல்'' என்கிறார் சத்யா.

''ஆண் என்ன பெண் என்ன...இருவருக்கும் ஒரே சட்டம் தேவை''

''ஆண் குடித்தால் அவரோடு போய் விடும் . அதுவே ஒரு பெண் குடித்தால் வயிற்றில் இருக்கும் குழந்தை மற்றும் வளர்க்கும் குழந்தைகளும் கெட்டு போகும் என்ற காரணத்தினால் தான் தடை விதித்து இருக்கிறார்கள், பெண்களை மதிக்க வேண்டும் என்ற காரணம் மட்டுமே இதன் நோக்கமாக இருக்கும்!!'' என்பது பாஷாவின் கருத்து.

''பெண்கள் தான் குடும்பத்தை ஒழுக்கத்துடன் வழி நடத்துகின்றனர். அவர்களே மது விற்பனை செய்தால் குழந்தைகளை எப்படி ஒழுக்கத்துடன் நடத்தமுடியும்'' என கூறுகிறார் சேக் கான்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

Twitter பதிவின் முடிவு, 2

''மது ஒழிப்பு இன்றைய தேவை, ஒரு மனிதனை மிருகமாக்கும் விஷமே மது!!! மது விலக்கு தமிழகத்தின் இன்றியமையாத ஒன்று'' என்பது அருண் எனும் நேயரின் கருத்து.

''தவறு. இருவருக்கும் ஒரே சட்டம் தேவை'' என்கிறார் கண்ணன்.

''முழுமையான தடையை வரவேற்கிறேன்'' என பதிவிட்டுள்ளார் ஹத்திஃபை.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

Twitter பதிவின் முடிவு, 3

''முற்றிலும் தடைவிதிக்க வேண்டும்'' என்கிறார் ராசமாணிக்கம்

''ஆண், பெண் இருவருக்கும் மது எதிரிதான்'' என கூறியுள்ளார் முரளி.

Twitter பதிவை கடந்து செல்ல, 4
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

Twitter பதிவின் முடிவு, 4

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :