பெண்கள் பேசட்டும்; உலகம் கேட்கட்டும் #BBCShe

பெண்கள் பேசட்டும்; உலகம் கேட்கட்டும் #BBCShe

கதை சொல்வதற்கான அதிகாரத்தை பார்வையாளர்களிடம் வழங்குகின்ற திட்டம்தான்“ ‘#BBCShe‘ என்கிற பணித்திட்டம்.

இந்தப் பணித்திட்டத்தோடு பல பெரு நகரங்களில் நாங்கள் பயணம் மேற்கொண்டு, எத்தகைய செய்திகளை வெளியிட வேண்டுமென விரும்புகிறீர்கள்? எத்தகைய செய்திகளை தவற விட்டுள்ளோம் என்பது பற்றி பெண்களிடம் கேட்கவுள்ளோம்.

எந்த செய்திகள் உங்களை தூண்டுதல் தருகின்றன? உங்களுக்கு கவலை தரும் செய்திகள் என்ன? உங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவை எவை? போன்ற அனைத்து விபரங்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை கேட்க விரும்புகின்றோம்.

இந்த திட்டத்தின் கரு எளிதானது. எதை பற்றிய செய்திகளை நாங்கள் வெளியிட வேண்டும், எவற்றை காணொளியாக வழங்க வேண்டும் என நீங்கள் எங்களுக்கு சொல்லுங்கள்.

எங்களுடைய நேயர்களோடு தொடர்பு கொள்ளும் வழிமுறையாக இது அமைந்து, உரையாடலை உருவாக்கும்.

உங்களை பற்றியும், உங்களுக்கு மிகவும் நெருக்கமான பிரச்சனைகள் பற்றியும் இருக்கும் இந்த உரையாடல் காணொளியாக நிறைவு பெறும்.

பீகார், ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நாங்கள் பயணம் மேற்கொள்ள இருக்கிறோம்.

எமது இணையதளம் மூலமாகவும், ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் எங்களுடைய பயணத்தை பின்தொடருங்கள்.

சமூக வலைதள பக்கங்கள் வழியாகவும் நீங்கள் பின்தொடராலம்.

‘#BBCShe‘ என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி டுவிட்டர் அல்லது ஃபேஸ்புக் மூலம் செய்தி அனுப்பி உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரிவியுங்கள். எங்களுடைய ஃபேஸ்புக் முகவரி பிபிசி தமிழ் ஃபேஸ்புக், எங்களுடைய ட்விட்டர் முகவரி பிபிசி தமிழ் ட்விட்டர்.

பிற செய்திகள்: