மரத்திற்குப் பின் போலீஸார் ஒளிந்துகொள்ள தடை - காரணம் என்ன?

உஸ்பெகிஸ்தான்

பட மூலாதாரம், AFP

உஸ்பெகிஸ்தான் போலீஸார் வாகன சோதனையின் போது மரத்திற்குப் பின்னும், கட்டடத்திலும் மறைந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நடைபெறும் போக்குவரத்து சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, அந்நாட்டுக் காவல்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உஸ்பெகிஸ்தான் குடிமக்கள், போலீஸாரின் இதுபோன்ற குற்றங்கள் குறித்து அரசு வலைத்தளத்தில் புகார் அளிக்கலாம். இது நிரூபிக்கப்பட்டால், காவல்துறை அதிகாரி பதவி நீக்கம் செய்யப்படலாம், பணிநீக்கம் செய்யப்படலாம் அல்லது ஓய்வூதியத்தை இழக்கக்கூடும்.

போலீஸாரின் நீல பச்சை சீருடைகள் கண்ணுக்கு தெரியாததாகத் தோன்றுகின்றன என்ற விமர்சனங்களை அடுத்து, காவல்துறை அதிகாரிகளுக்கு புதிய வகை சீருடைகளும் வழங்கப்பட உள்ளது.

கூடுதலான நடவடிக்கையாக, சாலைகளில் போலீஸார் லஞ்சம் வாங்குவதைத் தடுக்க, அவர்களுக்குக் கையடக்க வீடியோ கேமிராக்களும் வழங்கப்பட உள்ளது.

காவல்துறை அதிகாரிகள் மரத்திற்குப் பின்னும், கட்டத்திற்குப் பின்னும் மறைந்துகொள்வது நாட்டின் முக்கிய பிரச்சனையாக உள்ளது என உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

மரத்திற்குப் பின்பு ஒளிந்துகொண்டு, வாகன ஓட்டிகளைப் பொறி வைத்துப் பிடிப்பது போன்ற போலீஸாரின் செயல், போக்குவரத்து விதிகளை மீறும் விதமாக உள்ளது என சமீப காலமாக வாகன ஓட்டிகள் புகார் அளித்தனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: