இலங்கை: ரூ.1000 கோடி மதிப்புள்ள கொகேன் ஜனாதிபதி முன்னிலையில் அழிப்பு

இலங்கை

இலங்கையில் கைப்பற்றப்பட்ட 928 கிலோகிராம் கொகேன் போதைப்பொருள் இன்று பகிரங்கமாக அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு இலங்கை ரூபாயில் ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க முதலீட்டு அபிவிருத்தி சபை வளாகத்தில் இன்று முற்பகல் இந்த கொகேன் போதைப்பொருள் அழைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு முன்பாக இந்த போதைப்பொருள் அழிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பெருந்தொகை மதிப்புள்ள போதைப்பொருள் பகிரங்கமாக அழிக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை

2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்த கப்பலொன்றிலிருந்து போலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் இந்த கொகேன் கைப்பற்றப்பட்டிருந்தது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, நீதி அமைச்சர் தலதா அத்துகோரள, பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க உள்ளிட்ட மேலும் பலர் இந்த சந்தர்ப்பத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :