பாகிஸ்தான் என்கவுண்டரில் குடும்பமே பலி: போலீஸை சீர்திருத்த இம்ரான் உறுதி

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் பட்டப்பகலில் ஒரு கார் மீது சுட்டதில் ஒரு குடும்பமே இறந்த நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் போலீஸ் துறையில் பெரிய சீர்திருத்தங்களை செய்வதாக அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான் உறுதி அளித்துள்ளார்.

சனிக்கிழமை போலீஸ் மீது துப்பாக்கியால் சுட்ட ஐ.எஸ். குழுவின் தலைவர் ஒருவரை, போலீசார் திருப்பிச் சுட்டுக் கொன்றதாக இந்த சம்பவத்துக்குப் பிறகு போலீஸ் துறை கூறியது.

ஆனால், சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளும், கொல்லப்பட்ட குடும்பத்தில் உயிர் தப்பிய மூன்று குழந்தைகளும் இதை மறுக்கின்றன.

இந்த சம்பவம் பொதுமக்களிடையே கோபத்தைக் கிளறி, போராட்டங்களுக்கு வழி வகுத்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.

என்கவுண்டர் கொலைகள் என்று கூறப்படுவதை பல தசாப்தங்களாக அரசு கண்டும்காணாமல் இருப்பது முடிவுக்கு வரவேண்டும் என்று அந்நாட்டு மனித உரிமை அமைச்சர் ஷிரீன் மஜாரி தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: