எச்ஐவி ரத்தம் கோவையில் இரண்டு வயது குழந்தைக்கு ஏற்றப்பட்டதா? - விரிவான தகவல்கள்

கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.

இந்து தமிழ்: 'கோவையில் 2 வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றியதாக புகார்'

கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

திருச்சியைச் சேர்ந்த விஸ்வநாதன் (27) - சித்ரா (24) தம்பதி திருப்பூரில் தங்கி நெசவுக் கூலியாக வேலைசெய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் உள்ளனர். இதில், பெண் குழந்தைக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது, குழந்தையின் உடல் நலனை கருத்தில்கொண்டு ரத்த அணுக்கள் ஏற்றப்பட்டுள்ளன. குழந்தையின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால் கடந்த 7-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், குழந்தைக்கு ஏற்றப் பட்ட ரத்தத்தால் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர் என்கிறது அந்நாளிதழ்.

குழந்தைக்கு 50 மி.லி. ரத்தம் மட்டுமே ஏற்றினர், பாக்கெட்டில் உள்ள மீதி ரத்தத்தை ஏற்றவில்லை. இங்கு ரத்தம் ஏற்றிச் சென்ற பிறகுதான் குழந்தையின் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, ரத்த மாதிரியை பரிசோதித் ததில் குழந்தைக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. எனக்கும், எனது மனைவிக்கும் பாதிப்பு இல்லை. இரட்டை குழந்தைகளில் மற்றொரு குழந்தையை பரிசோதித்ததிலும் பாதிப்பு இல்லை. நாங்கள் வேறு எங்கும் குழந்தையை சிகிச்சைக்காக எடுத்துச் செல்லவில்லை. அரசு மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தத்தில்தான் பிரச்சினை இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு குழந்தையின் தந்தை கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

"சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தை பிறந்த போது 700 கிராம் மட்டுமே இருந்துள்ளது. மேலும், இதயத்தில் ஓட்டை மற்றும் மூளை வளர்ச்சி குறைவும் இருந்துள்ளது. இங்கு சிகிச்சைக்கு அழைத்துவரும் முன்பு அவர்கள் வேறு மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். எந்த ரத்தம் ஏற்றப்பட்டாலும், அதை முறையாக எச்ஐவி பரிசோதனைக்கு உட்படுத்தி, எந்த தொற்றும் இல்லை என தெரிந்த பிறகே கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்ற அனுமதிக்கப்படுகிறது.

ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்ததால் அந்த குழந்தைக்கு ரத்த அணுக்கள் ஏற்றப்பட்டன. ரத்த அணுக்கள் 100 மி.லி. பாக்கெட்டில்தான் வரும். குழந்தைக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவு மட்டுமே ரத்த அணுக்கள் செலுத்தப்படும். அதன் அடிப்படையில் 50 மி.லி. மட்டுமே செலுத்தப்பட்டது. மேலும், ரத்த அணுக்கள் மூலமாக எச்ஐவி பரவாது.

கோவை அரசு மருத்துவ மனையில் முதல் முறையாக அனுமதிக்கப்பட்டபோது அந்த குழந்தைக்கு ஒன்றேகால் வயது தான். பிறந்த குழந்தைக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது உடனே தெரியாது.

அந்த குழந்தைக்கு ஒன்றரை வயது ஆன பிறகுதான் பாதிப்பு இருப்பது தெரியும். கோவை அரசு மருத்துவமனை மூலமாக எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. எனினும், தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் குழந்தையின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது" என்று மருத்துவமனை டீன் அசோகன் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது அந்நாளிதழ்.

இலங்கை

தினமணி: 'அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது ஏன்? - ராமதாஸ் விளக்கம்'

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது ஏன் என்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார் என்கிறது தினமணி நாளிதழ்.

ராமதாஸ்

பட மூலாதாரம், FACEBOOK

"மக்களவைக்கானத் தேர்தலில் பாமகவின் தலைமையில் கூட்டணி அமைப்பது சாத்தியமில்லை என்ற நிலையில், அதிமுக, திமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளில் ஒன்றுடன் அணி சேருவதுதான் வாய்ப்பாக இருந்தது.

அதிமுக, திமுக ஆகிய இரண்டில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதைத் தீர்மானிக்க வேண்டியிருந்தது.

2004-09 காலத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இருந்த போது தமிழகத்தின் நலன் கருதி ஏராளமானத் திட்டங்களைக் கொண்டு வந்தார். அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால் சேலத்தில் ரூ.139 கோடியில் அதி உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரை மற்றும் காஞ்சிபுரத்தில் மண்டல புற்றுநோய் மையம், நெடுஞ்சாலைகளில் 10 இடங்களில் விபத்துக்காய சிறப்பு சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட பல திட்டங்களைக் கொண்டு வந்தார்.

மதுரையில் ரூ.150 கோடியில் எய்ம்ஸுக்கு இணையான அதி உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டு, அப்போதிருந்த திமுக அரசால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக ஒதுக்கப்பட்ட நிதி வீணடிக்கப்பட்டது. அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டிருந்தால் அது கடந்த 10 ஆண்டுகளில் இப்போது கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைவிட பெரிய உச்சநிலை மருத்துவ மையமாக உருவெடுத்திருக்கும். அதைப்போல பாமக சார்பில் மத்திய ரயில்வே துறை அமைச்சர்களும் தமிழகத்துக்குப் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளனர்.

ஆனால், 2009-14 காலங்களில் திமுக மத்திய அமைச்சரவையில் நீடித்த போதிலும் ரயில்வே துறையில் தமிழகம் பின்னடைவைச் சந்தித்தது.

அதிமுக மீது விமர்சனங்களே இல்லையா என்று கேட்டால், இல்லை என்று பதிலளிக்க முடியாது.

ஆனால், கல்வித்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக பாமக முன்வைத்த பல்வேறு யோசனைகளை அதிமுக அரசு ஏற்றுக் கொண்டது. அதேபோல், 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்தது. பேரறிவாளனுக்கு பிணை வழங்கியது. கடலூர்- நாகை மாவட்டங்களில் முந்தைய ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்ட பெட்ரோகெமிக்கல் முதலீட்டு மண்டலத்தைக் கொள்கை அளவில் கைவிட்டது. விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்தது. காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியது என பாமக சார்பில் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளையும், யோசனைகளையும் அதிமுக அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, தமிழகத்தின் நலன் கருதி மாநில அளவில் செயல்படுத்த வேண்டிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கும் அதிமுக அரசு கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளது. மத்தியில் புதிதாக அமைய உள்ள அரசில் தமிழகத்துக்கான திட்டங்களையும், உரிமைகளையும் போராடிப் பெறும் விஷயத்தில் இணைந்து செயல்படவும் அதிமுகவும், பாமகவும் ஒப்புக் கொண்டுள்ளன.

இந்த ஒருங்கிணைப்பு தமிழகத்துக்கு பல நன்மைகளைப் பெற்றுத் தரும் என்று பாமக நம்புகிறது." என்று ராமதாஸ் விளக்களித்துள்ளதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

இலங்கை
இலங்கை

தினத்தந்தி: 'தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள்?'

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் முடிவாகி உள்ளது. ராகுல்காந்தியுடன், கனிமொழி மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னையில் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) வெளியிடுகிறார் என்கிறது தினத்தந்தி.

"அ.தி.மு.க.வை தொடர்ந்து, தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி, தொகுதி பங்கீடு விவரங்களை அறிவிக்க இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது.

தேசிய கட்சியான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்று இறுதி முடிவு எடுப்பதற்காக, டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், கனிமொழி எம்.பி. நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கிய, தொகுதி பங்கீடு, தொகுதிகள் குறித்த செயல் திட்டம் பற்றி கனிமொழி விளக்கி கூறினார். இந்தநிலையில் மீண்டும் ராகுல்காந்தியை கனிமொழி எம்.பி. சந்தித்து பேசினார். நேற்று மாலை 5 மணி தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 7 மணிவரை நீடித்தது. இந்த பேச்சுவார்த்தையின்போது, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் என 10 தொகுதிகள் வழங்கப்பட இருக்கிறது.

முன்னதாக, தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, அமைப்பு செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினர்.

டெல்லியில் ராகுல்காந்தியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விவரங்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிப்பதற்காக கனிமொழி எம்.பி. நேற்று இரவு உடனடியாக சென்னை புறப்பட்டார். தி.மு.க. கூட்டணியில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கான இடங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில், டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இன்று (புதன்கிழமை) சென்னை வந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளனர். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் 10 இடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். தொகுதி பங்கீடுக்கான விவரமும் வெளியிடப்படுகிறது." என்கிறது அந்நாளிதழ்.

இலங்கை
ADMK BJP PMK

பட மூலாதாரம், இந்து தமிழ்

இலங்கை

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'கூரியர் நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்'

ஒரு பட்டு புடவையை சேதப்படுத்தியதற்காக கூரியர் நிறுவனமான ப்ளூ டார்ட்டுக்கு ரூபாய், 1,02,510 அபராதம் விதித்துள்ளது நுகர்வோர் மன்றம். காஞ்சிபுரத்திலிருந்து ஹைதராபாத்துக்கு 42 புடவைகள் அனுப்பப்பட்டதில் 40 புடவை சேதமாகியது என ராஜமாணிக்க முதலியார் டெக்ஸ்டைல்ஸ் தொடர்ந்த வழக்கில் இவ்வாறாக நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டுள்ளது என அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :