Got a TV Licence?

You need one to watch live TV on any channel or device, and BBC programmes on iPlayer. It’s the law.

Find out more
I don’t have a TV Licence.

நேரடிச் செய்தி

இங்கு பிரசுரிக்கப்பட்ட நேரங்கள் அனைத்தும் பிரிட்டன் நேரமே

  1. ராஜஸ்தான் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக 23 முதல் 25 இடங்களில் வெல்லும் என இந்தியா டுடே - ஏக்சிஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு கூறுகிறது.

    நியூஸ் 18 - ஐ.பி.எஸ்.ஓ.எஸ் கருத்துக்கணிப்பு பாஜக 22-23 இடங்களிலும், காங்கிரஸ் இரண்டு முதல் மூன்று இடங்களிலும் வெல்லும் என்றும் கூறுகிறது.

    exit poll final
  2. Post update

    டுடேஸ் சாணக்யா - நியூஸ் 24 கருத்துக்கணிப்பு

    தேசிய ஜனநாயக கூட்டணி 336 முதல் 364 இடங்களிலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 86 முதல் 104 இடங்களிலும் வெல்லும் என டுடேஸ் சாணக்யா - நியூஸ் 24 நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு கூறுகிறது.

    காங்கிரஸ் 46 முதல் 64 இடங்களிலும், பாஜக 286 முதல் 314 இடங்களிலும் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    exit poll final
  3. நியூஸ் 18 - ஐ.பி.எஸ்.ஓ.எஸ் கருத்துக்கணிப்பு.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்களிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 82 இடங்களிலும் வெல்லும் என்கிறது நியூஸ் 18 - ஐ.பி.எஸ்.ஓ.எஸ் கருத்துக்கணிப்பு.

    இந்தக் கருத்துக்கணிப்பின்படி பாஜக 276 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகள் 60 இடங்களிலும் வெல்லும்.

    காங்கிரஸ் 46 இடங்களிலும் கூட்டணிக் கட்சிகள் 36 இடங்களிலும் வெல்லும் என்கிறது இந்தக் கருத்துக்கணிப்பு.

    திரிணாமுல் காங்கிரஸ் 38 இடங்கள், சமாஜ்வாதி கட்சி 10 இடங்கள், பகுஜன் சமாஜ் கட்சி ஏழு இடங்கள் இடதுசாரிகள் 12 இடங்கள் உள்பட பிற கட்சிகள் 124 இடங்களில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

    நியூஸ் 18 - ஐ.பி.எஸ்.ஓ.எஸ் கருத்துக்கணிப்பு
  4. குஜராத் மாநில முடிவுகள்

    குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளில் 25 முதல் 26 தொகுதிகளில் பாஜக வெல்லும் என்றும் அதிகபட்சம் ஒரு தொகுதியில் காங்கிரஸ் வெல்லும் என்றும் இந்தியா டுடே - ஏக்சிஸ் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

    இதே முடிவுகளையே நியூஸ் 18 - ஐ.பி.எஸ்.ஓ.எஸ் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

    பாஜக அனைத்து இடங்களிலும் வெல்லும் என்கிறது சாணக்யா கருத்துக்கணிப்பு.

    குஜராத்
  5. ஜார்கண்ட், சட்டீஸ்கர் நிலவரம்

    ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக கூட்டணி 12 முதல் 14 தொகுதிகளிலும், காங்கிரஸ் அதிகபட்சம் இரண்டு தொகுதிகளிலும் வெல்லும் என்கிறது இந்தியா டுடே - ஏக்சிஸ் கருத்துக்கணிப்பு.

    சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் மூன்று முதல் நான்கு இடங்களிலும், பாஜக கூட்டணி ஏழு முதல் எட்டு இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளது என்கிறது இந்தக் கருத்துக்கணிப்பு.

    சட்டீஸ்கர்
  6. கேரள மாநில முடிவுகள்

    காங்கிரஸ் கூட்டணி கேரளாவில் 15 முதல் 16 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி மூன்று முதல் ஐந்து இடங்களிலும் வெல்லும் என்கிறது இந்தியா டுடே - ஏக்சிஸ் கருத்துக்கணிப்பு.

    பாஜக அங்கு அதிகபட்சம் ஒரு தொகுதியில் வெல்ல வாய்ப்புள்ளதாக இந்தக் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

    ரிபப்ளிக் - சி வோட்டர் கருத்துக்கணிப்பு, கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 15 தொகுதிகளை கைப்பற்றுமென்றும், பா.ஜ.க கூட்டணி ஒரு தொகுதியிலும் வெல்லாது என்றும் கூறுகிறது.

    கேரளா
  7. ஆந்திரப் பிரதேச முடிவுகள்

    இந்தியா டுடே - ஏக்சிஸ் கருத்துக்கணிப்பு ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் நான்கு முதல் ஆறு இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 18 முதல் 20 இடங்களிலும் வெல்லும் என்றும் தெரிவிக்கிறது.

    ரிபப்ளிக் தொலைக்காட்சி - சி வோட்டர் கருத்துக்கணிப்பு ஆந்திரப் பிரதேசத்தில் 11 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 14 இடங்களிலும் வெல்லும் என்கிறது.

    நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பு 20 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஐந்து இடங்களிலும் வெல்லும் என்கிறது.

  8. பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் கருத்துக்கணிப்பு

    பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் எட்டு முதல் ஒன்பது தொகுதிகளிலும் பாஜக கூட்டணி மூன்று முதல் ஐந்து இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்திலும் வெல்லும் என இந்தியா டுடே - ஏக்சிஸ் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

    பஞ்சாபில் காங்கிரஸ் கூட்டணி 11 தொகுதிகளில் வெல்லும் என்றும், பா.ஜ.க கூட்டணி இரண்டு தொகுதிகளில் வெல்லும் என்றும் ரிபப்ளிக் - சி வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பாஜக இரண்டு முதல் மூன்று இடங்களிலும், தேசிய மாநாட்டுக் கட்சி இரண்டு முதல் மூன்று இடங்களிலும், காங்கிரஸ் அதிகபட்சம் ஓரிடத்திலும் வெல்லும் என்றும் இந்தக் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

    மெஹபூபா முஃப்தியின் ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி எங்கும் வெல்ல வாய்ப்பில்லை என்கிறது இந்தியா டுடே - ஏக்சிஸ் கருத்துக்கணிப்பு.

    வாக்காளர்கள்
    Image caption: முதல் தலைமுறை இளம் வாக்காளர் ஒருவர் உள்பட சண்டிகரைச் சேர்ந்த மூன்று தலைமுறை வாக்காளர்கள்
  9. பிகார் மாநில கருத்துக்கணிப்பு முடிவுகள்

    நியூஸ் எக்ஸ் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் பிகார் மாநிலத்தில், பாஜக ஒன்பது தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் ஒன்பது தொகுதிகளிலும், காங்கிரஸ் ஐந்து தொகுதிகளிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 11 தொகுதிகளிலும், பிற கட்சிகள் ஆறு தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    பிகாரை பொறுத்தவரை 7 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வெல்லும் என்றும், 33 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணி வெல்லும் என்றும் ரிபப்ளிக் - சி வோட்டர் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

  10. மகாராஷ்டிரா - மத்தியப் பிரதேச கருத்துக்கணிப்பு முடிவுகள்

    மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக - சிவசேனா கூட்டணி 38 முதல் 42 இடங்களிலும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆறு முதல் 10 இடங்களிலும் வெல்லும் என இந்தியா டுடே - ஏக்சிஸ் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

    இந்த மாநிலத்தில் 14 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றுமென்றும், 34 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றுமென்றும் என்றும் கூறுகிறது ரிபப்ளிக் - சி வோட்டர் கருத்துக்கணிப்பு.

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக 26 முதல் 28 இடங்களிலும் காங்கிரஸ் ஒன்று முதல் மூன்று இடங்களிலும் வெல்லும் என்று இந்தக் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

    exit polls 2019
  11. ஏழாவது கட்டத் தேர்தல் - 61.07% வாக்குப்பதிவு

    ஏழாவது கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு விகிதத்தின் இடைக்கால கணக்கீடு 61.07% என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இது இறுதி விகிதம் அல்ல.

    View more on twitter
  12. மேற்கு வங்க மாநில நிலவரம்

    நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பின்படி மேற்கு வங்கத்தில் பாஜக 11 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 29 இடங்களிலும், காங்கிரஸ் இரு இடங்களிலும், இடதுசாரிகள் ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்புள்ளது.

    மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 19 முதல் 22 இடங்களிலும், பாஜக 19 முதல் 23 இடங்களிலும் வெல்லும் என இந்தியா டுடே - ஏக்சிஸ் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

    மாநிலத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் பாஜகவும் வலுவாக உள்ளதாக இந்தியா டுடே கூறுகிறது.

    தாம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நம்புவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜீ தெரிவித்துள்ளார்.

    எதிர்க் கட்சிகள் ஒற்றுமை, வலிமை மற்றும் துணிவுடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    View more on twitter
  13. தென்மாநிலங்களின் கருத்துக்கணிப்பு நிலவரம்

    இந்தியா டுடே - ஆக்சிஸ் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தென்மாநிலங்களை பொறுத்த வரை, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 55 – 63 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 23 – 33 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 35 – 46 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  14. தமிழக இடைத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்

    இந்தியா டுடே - ஏக்சிஸ் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கு நடந்துள்ள சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக 20 முதல் 22 இடங்களில் வெல்லும்.

    அதிமுக அதிகபட்சம் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் வெல்லும் என்கிறது இந்தியா டுடே - ஏக்சிஸ் கருத்துக்கணிப்பு.

    கருத்துக்கணிப்பு
  15. உத்தரப்பிரதேச கருத்துக்கணிப்பு முடிவுகள்

    இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் பாஜக கூட்டணி 38, காங்கிரஸ் இரண்டு மற்றும் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி 40 இடங்களை வெல்லும் என ரிபப்ளிக் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

    நியூஸ் எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி உத்தரப்பிரதேசத்தில் 37 இடங்களிலும், காங்கிரஸ் இரண்டு இடங்களிலும், பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி 40 இடங்களிலும் பிற கட்சிகள் ஒரு தொகுதியிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  16. தமிழக கருத்துக்கணிப்பு நிலவரம்

    தமிழகத்தில் திமுக கூட்டணி 34 முதல் 38 இடங்களிலும், அதிமுக அதிகபட்சம் நான்கு தொகுதிகளிலும் வெல்லும் என இந்தியா டுடே - ஏக்சிஸ் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

    புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் கட்சியின் வசமாகும் என்று இந்தக் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

    சி.என்.என்நியூஸ் 18 கருத்துகணிப்பு திமுக 22 -24 தொகுதிகளை கைப்பற்றுமென்றும், அதிமுக 14-16 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கூறுகிறது.

    டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பின்படி, தேர்தல் நடந்துள்ள 38 தொகுதிகளில் திமுக கூட்டணி 29 இடங்களிலும், அதிமுக கூட்டணி ஒன்பது இடங்களிலும் வெல்லும்.

  17. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்

    ஏழு கட்டத் தேர்தல்களும் முடிந்துள்ளதால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

    ரிபப்ளிக் தொலைக்காட்சி மற்றும் சி-வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு பாஜக கூட்டணிக்கு 287 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 128 இடங்களும், பிற கட்சிகளுக்கு 127 இடங்களும் கிடைக்கும் என்று கூறுகிறது.

    பாஜக கூட்டணி 306 இடங்கள், காங்கிரஸ் கூட்டணி 132 இடங்கள் மற்றும் பிற கட்சிகள் 104 இடங்கள் பெறும் என டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

    பாஜக கூட்டணி 298 இடங்கள், காங்கிரஸ் கூட்டணி 118 இடங்கள் மற்றும் பிற கட்சிகள் 126 இடங்கள் பெறும் என நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

    கருத்துக்கணிப்பு exit polls 2019
  18. மிகவும் உயரமான இடத்தில் அமைந்திருந்த வாக்குச்சாவடி

    இந்தியாவிலேயே மிகவும் உயரமான இடத்தில் அமைந்திருந்த டாஷிகங் வாக்குச்சாவடியில் 49 வாக்காளர்கள் இருந்தனர்.

    இது இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது.

    வாக்குப்பதிவு
  19. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது

    இந்தியாவின் 17வது மக்களவை தேர்தலூக்கான ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிந்தது.

    கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்தது.

    வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேலூர் தொகுதி தவிர 542 தொகுதிகளில் நடத்தப்பட்ட தேர்தலின் முடிவுகள் மே23ம் தேதி வெளியாக உள்ளன.

  20. மாலை 5 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்

    மாநிலம் வாரியாக

    பிகார் – 47.24%

    இமாச்சல பிரதேசம் – 57.43%

    மத்தியப் பிரதேசம் – 60.14%

    பஞ்சாப் – 51.20%

    உத்தரப்பிரதேசம் – 47.61%

    மேற்கு வங்கம் – 65.11%

    ஜார்கண்ட் – 66.64%

    சண்டிகர் – 51.18%

    தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி மாலை 5 மணி வர 50% வாக்குகள் கூட பிகார் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பதிவாகவில்லை

    View more on twitter
பக்கம் 1 இல் 3