ஆந்திரா: மாவோயிஸ்டுகளால் எம்.எல்.ஏ சுட்டுக்கொலை

Maoist

ஆந்திராவில் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று காவல் துறையினர் பிபிசி இடம் தெரிவித்துள்ளனர்.

அரக்கு எனும் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரான கிடாரி சர்வேஸ்வர ராவ் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் 2014இல் தேர்தலில் வெற்றி பெற்றார். சமீபத்தில்தான் அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.

கிடாரி சர்வேஸ்வர ராவ்

பட மூலாதாரம், facebook / kidari sarveswara rao

படக்குறிப்பு, கிடாரி சர்வேஸ்வர ராவ்

சர்வேஸ்வர ராவும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவேரா சோமுவும் ஞாயிறு மதியம் மாவோயிஸ்டு குழு ஒன்றால் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் பிபிசி செய்தியாளர் பல்லா சதீஷிடம் தெரிவித்துள்ளனர்.

ஒடிஷா மாநிலத்தின் எல்லை அருகே அமைந்துள்ள அரக்கு தொகுதி பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இப்பகுதி கனிமச் சுரங்கங்கள் அதிகம் உள்ள பகுதியாகும்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :