தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 அமைப்புக்களுக்கு தடை - அரசாணை வெளியீடு

கோப்புப்படம்

பட மூலாதாரம், Allison Joyce

படக்குறிப்பு, கோப்புப்படம்

இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று அமைப்புக்களுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டது.

இதன்படி, தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாதைய் மில்லதே இப்ராஹிம் மற்றும் வில்லயாத் அஸ் செயிலானி ஆகிய அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையெழுத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் அவசரகால விதிமுறைகளின் 75-1 சரத்திற்கு அமைய இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதியன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அதனுடன் தொடர்புடையதாக கூறப்படும் அமைப்புக்களுக்கு ஜனாதிபதி சிறிசேன தடை விதித்திருந்தார்.

ஜனாதிபதிக்கு காணப்படுகின்ற அதிகாரங்களின் பிரகாரம் இந்த தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதிக்க சாதியினர் முன் அமர்ந்து விருந்து உண்ட தலித் கொலை?

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :