வங்கதேசம் தீ விபத்து: தலைநகரில் 78 பேரை பலிகொண்ட தீ விபத்து

வங்கதேசம் தீ விபத்து

பட மூலாதாரம், Reuters

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வங்கதேச மாவட்டத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது 78 பேர் பலியாகியுள்ளனர்.

பல மாடி கட்டடத்தில் புதன்கிழமை மாலை இந்த தீ விபத்து ஏற்பட்டது. ரசாயன பொருட்கள் சேமித்து வைத்திருந்த கிடங்கு இந்த கட்டடத்தில்தான் இருந்தது.

இந்த தீ விரைவாக பக்கத்து கட்டடங்களுக்கும் பரவியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிபிசியிடம் பேசிய வங்க தேச நிர்வாகிகள், இந்த தீ விபத்தில் 78 பேர் வரை பலியானதாக தெரிவித்தனர்.

வங்கதேசம் தீ விபத்து

பட மூலாதாரம், Reuters

ஏஎஃபி செய்தி முகமையிடம் பேசிய தீயணைப்பு துறை தலைவர் அலி அஹமத், "சிலிண்டரில் ஏற்பட்ட கசிவிலிருந்தே இந்த தீ உருவாகி உள்ளது. இந்த கட்டடத்தில் ரசாயன குடோனும் இருந்ததால் தீ வேகமாக பரவி உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

தீ விபத்தினால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களும் தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பழமையான செளக்பஜாரில்தான் இந்த தீ விபத்து ஏற்பட்டது இங்கு தெருக்கள் குறுகலாக இருக்கும். வீடுகளும் நெருக்கமாக இருக்கும்.

கட்டட விதிமுறைகளை முறையாக பின்பற்றாதது வங்கதேசத்தில் பெரும் பிரச்சனையாக உள்ளது.

டாக்காவிலுள்ள ராணா பிளாசாவில் 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் 1,100க்கும் மேற்பட்டவர்கள் பலியானர்கள்.

இந்தியாவால் ஏன் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது?

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :