தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும்

திமுகவுக்கு சாதாகமான கருத்து கணிப்பு முடிவுகள்

பட மூலாதாரம், Getty Images

மக்களவைத் தேர்தல் 2019ல் தமிழகத்தில் எந்த கட்சிகள் எவ்வளவு தொகுதிகளை கைப்பற்றுமென கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

டைம்ஸ் நவ் மற்றும் வி.எம்.ஆர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பானது தமிழகத்தில் திமுக கூட்டணி 29 மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றுமென்றும், அதிமுக கூட்டணி 9 மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றுமென்றும் கூறுகிறது.

நியூஸ் 18 - ஐபிஎஸ்ஓஎஸ் கருத்து கணிப்பு திமுக கூட்டணி 22 முதல் 24 மக்களவைத் தொகுதிகள் வரை கைப்பற்றலாமென்றும், அதிமுக கூட்டணி 14 முதல் 16 மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றலாமென்றும் தெரிவிக்கிறது.

நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பு திமுக கூட்டணி 27 மக்களவை இடங்களை கைப்பற்றும் என்றும் அதிமுக கூட்டணி 11 மக்களவை இடங்களை கைப்பற்றுமென்றும் தெரிவிக்கிறது.

இந்தியா டுடே கருத்து கணிப்பு தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி 4 மக்களவைத் தொகுதிகள் வரை கைப்பற்றலாமென்றும், காங்கிரஸ் கூட்டணி 34 முதல் 38மக்களவைத் தொகுதிகள் வரை கைப்பற்றலாம் என்றும் கூறுகிறது.

ரிபப்ளிக் - சி வோட்டர் கருத்து கணிப்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி 27 மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றும் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி 11 மக்களவைத் தொகுதிகளில் வெல்லும் என்றும் கூறுகிறது.

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மறைந்தபின் திமுகவும், அதிமுகவும் சந்திக்கும் முதல் மக்களவைத் தேர்தல் இது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :