ஆண்களுக்கு நிகராக 'வெல்டிங்' பணியில் அசத்தும் பெண்கள்

ஆண்களுக்கு நிகராக 'வெல்டிங்' பணியில் அசத்தும் பெண்கள்

இந்தியாவில் பல துறைகளில் வேலையின்மை அதிகரித்துள்ள நிலையில், வெல்டிங் துறையில் சுமார் 10 லட்சம் பணிகள் இருக்கின்றன என்றும், தேர்ந்த வெல்டர்களுக்கு தட்டுப்பாடு நீடிப்பதாகவும் இந்திய வெல்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நவீன தொழில்நுட்ப கருவிகள், லேசர் கருவிகள் போன்றவை அறிமுகமாகியுள்ளதால், வெல்டிங் துறை சவாலாக இருந்தாலும், பெண்கள் பாதுகாப்பாக பணிபுரியும் துறையாக முன்னேற்றம் அடைந்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

பெண்கள் வெல்டிங் வேலைகளில் பங்குபெறுவதை ஊக்குவிக்க சிறந்த பெண் வெல்டர்களுக்கான போட்டி சென்னையில் நடைபெற்றது.

இந்திய வெல்டிங் நிறுவனம், இந்திய அணு ஆராய்ச்சி மையம், கெம்பி, நெக்ஸ்ட் ஜென்பிளாஸ்மா உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்திய அந்த போட்டியில் இந்திய அளவில் 14 பெண்கள் கலந்து கொண்டனர்.

காணொளி தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: கே.வி.கண்ணன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: